கொழும்பு – வாழைத்தோட்டம் பகுதியில் காணாமல் போயிருந்த மூன்று சிறுமிகள் மீளவும் வீடு திரும்பியுள்ளனர்.
காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது.
கொழும்பு – வாழைத்தோட்டம் பிரதேசத்தைச் சேர்ந்த 13 – 15 வயதிற்குட்பட்ட சிறுமிகளே இவ்வாறு காணாமல் போயிருந்தனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள் இருவர் மற்றும் உறவுக்கார சிறுமி ஒருவர் ஆகியோரே காணாமல் போயுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.