சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ இன் இலங்கை விஜயம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய அவர் எதிர்வரும் ஜனவரி 8 ஆம் திகதியும் 9ஆம் திகதியும் இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்த விஜயத்தின்போது, சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 65ஆவது ஆண்டு விழாவை ஆரம்பித்து வைக்கவுள்ளதாகவும் தூதரகம் அறிவித்துள்ளது.