வடமாகாணத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு அதானி குழுமம் விருப்பம் தொிவித்திருக்கின்றது.
இது தொடர்பில் அதானி குழுமத்தின் பிரதிநிதிகள் அரசாங்க பிரதிநிதிகளை இந்த வாரம் சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளனர் என மோர்னிங் தெரிவித்துள்ளது.
சில வாரங்களிற்கு முன்னர் அதானி குழுமம் கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையம் தொடர்பில் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருந்தது. யாழ்ப்பாணத்தின் மூன்று தீவுகளில் எரிசக்தி திட்டமொன்றை ஆரம்பிப்பது குறித்து சீனா ஆர்வம் காட்டிவருவதாக வெளியான செய்திகளை தொடர்ந்தே இந்தியா பாதுகாப்பு கரிசனைகளை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.