சீனாவின் தன்னாட்சி பெற்ற பிராந்தியமான சின்ஜியாங் உய்குர் பிராந்தியத்தில் உள்ள கோமுக்செரிக் நகரை சேர்ந்த மூதாட்டி அலிமிஹான் செய்ட்டி.
1886-ம் ஆண்டு ஜூன் 25-ந் திகதி பிறந்த இவர், கடந்த 2013-ம் ஆண்டு சீனாவின் மிகவும் வயதானவர்களின் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தார். அப்போது அவருக்கு வயது 127. இந்த நிலையில் தன்னுடைய 135-வது வயதில் அலிமிஹான் செய்ட்டி கடந்த வியாழக்கிழமை உயிரிழந்தார்.
இதனை சின்ஜியாங் உய்குர் பிராந்திய அதிகாரிகள் தெரிவித்தனர். அலிமிஹான் செய்ட்டி தனது இறுதி நாள் வரை மிகவும் எளிமையான மற்றும் வழக்கமான தினசரி வாழ்க்கை வாழ்ந்து வந்ததாகவும், அவர் நேரத்துக்கு சாப்பிட்டு, வீட்டின் முற்றத்தில் அமர்ந்து பொழுதை கழித்து வந்ததாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.