சிகரெட்டுகளுக்கான புதிய வரி கொள்கையை அறிமுகப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
புகையிலை மற்றும் மது தொடர்பான தேசிய அதிகார சபையுடன் சுகாதார அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த அதிகார சபையின் தலைவர் கலாநிதி சமாதி ராஜபக்க்ஷ உள்ளிட்ட அதன் பணிப்பாளர் குழு உறுப்பினர்கள் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.
புதிய வரி கொள்கையை நடைமுறைப்படுத்துவதன் ஊடாக சிகரெட்டுக்களின் பாவனையை குறைக்க முடியும். இந்த வரி கொள்கைக்குரிய சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதாக புகையிலை மற்றும் மது தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் இதன் போது தெரிவித்தார்.
உலகின் ஏனைய நாடுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புகைப்பொருள் தொடர்பான வரிக் கொள்கைகள் குறித்து ஆராயந்து புதிய கொள்கையொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது. அத்தோடு 2006 ஆம் ஆண்டு 27 ஆம் இலக்க புகையிலை மற்றும் மது தொடர்பான தேசிய அதிகார சபை சட்டத்தை நடைமுறைக்கு பொருத்தமான வகையில் திருத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.