புதிய வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்களை (19/10) கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
இதன் போது வடக்கு மாகாண மக்களின் உடனடியான தேவைகள் குறித்து சம்பந்தன் ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
மேலும் சம்பந்தன் முன்வைத்துள்ள விடயங்களை எழுத்து மூலமாக தன்னிடத்தில் ஒப்படைக்குமாறும் ஆளுநர் கோரியுள்ளார்.
சிரேஷ்ட அரசியல் வாதி என்ற அடிப்படையில் சம்பந்தனுடனான சந்திப்பு இடம்பெற்றதென்றும், அவரை 1983ஆம் ஆண்டு முதல் அறியப்பெற்றுள்ளவர் என்றும் ஆளுநர் குறிப்பிட்டார்.
இதேவேளை, ஆளுநருடனான சந்திப்பு குறித்து விரிவான அறிக்கையொன்றை வெளியிடத் தீர்மானித்துள்ளதாக கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் எமது செய்திப்பிரிவிடம் தெரிவித்தார்.