கோடிஸ்வரர் தம்மிக்க பெரேராவின் D.P.EDUCATION பவுண்டேசனின் நன்கொடையின் வடமாகாணத்திற்கு முதலாவது டிஜிட்டல் வகுப்பறைக்கான உபகரணங்கள் கையளிக்கப்பட்டுள்ளன.
இந்த உபகரணங்களை முதன்முதலாக பெற்றுக்கொண்ட பாடசாலையாக வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம் காணப்படுகின்றது.
உபகரணங்களைக் கையளிக்கும் நிகழ்வு (22/10/2021) அன்று பாடசலை வளாகத்தில் நடைபெற்றது.
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் 2,904மாணவர்கள் கல்வி கற்றுவருகின்றனர். இங்கு 166ஆசிரியர்கள் கடமையாற்றுகின்றார்கள்.
இந்நிலையில் டிஜிட்டல் உபகரணங்களைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் பாடசாலை அதிபர் உள்ளிட்ட நிருவகத்தினர் “கோடிஸ்வரர் வர்த்தகர் தம்மிக்க பெரேரா அவர்களின் பங்களிப்பில் வடமாகாணத்தில் முதற்பாடசாலையாக D.P.EDUCATION மூலம் அமைக்கப்பட்ட திறன் வகுப்பறை சம்பிரதாய பூர்வமாக கிடைக்கப்பெற்றுள்ளது. D.P.EDUCATION பவுண்டேசனுக்கு எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்” எனக் குறிப்பிட்டனர்.
மேலும், வடமாகாணத்தின் ஏனைய பாடசாலைகளுக்கும் இவ்விதமான டிஜிட்டல் வகுப்பறைகளை வழங்குவதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ள கோடிஸ்வரர் தம்மிக்க பெரேரா, டிஜிட்டல் வகுப்பறை உபகரணங்களைப் பெறுவவதற்கான ZOOM செயலி கூட்டத்திற்கு மாணவர்களை ஒருங்கிணைத்தால் மட்டுமே போதுமானது’ என்று குறிப்பிட்டுள்ளார்.