பிக்பாஸ் அமீரின் சொந்த வாழ்க்கை குறித்து அதிர்ச்சியளிக்கும் தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. சின்னத்திரையின் பிரமாண்ட நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இதன்முலம் பல பிரபலங்கள் வெள்ளித்திரைக்கு கிடைத்துள்ளனர். இம்முறை பிரமாண்டமான முறையில் துவங்கிய பிக் பாஸ் சீசன் 5வில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக வந்தவர் நடன கலைஞர் அமீர்.
50வது நாளில் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த அமீர், 24 நாட்களாக விளையாடி வருகிறார். தனது விளையாட்டின் மூலம் ரசிகர்களையும் சம்பாதித்துள்ளார்.வீட்டில் பாவனிக்கு சிறந்த நண்பராக அமீர் விளங்குகிறார்.
இந்நிலையில் அமீரின் சொந்த வாழ்க்கை குறித்து அதிர்ச்சியளிக்கும் தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி, அமீர் தனது ஒரு வயதிலேயே தனது தந்தையை இழந்துவிட்டார் என்றும், மேலும் அமீர் 10ஆம் வகுப்பு படிக்கும் பொழுது, அவரது தாயார் கொலை செய்யப்பட்டார் என்றும், அதன்பின், அனாதை ஆசிரமத்தில் தனது சகோதரனுடன் அமீர் வளர்ந்து வந்துள்ளார். சிறு வயதில் அமீர் பட்ட இந்த கஷ்டங்கள் குறித்து தற்போது தகவல் வெளியாகி பலரின் மனதை உலுக்கியுள்ளது.