உன்னத கொள்கைகளை முன்னெடுத்த உதாரண புரிசராக குமாரதாஸ் மாப்பாண முதலியார் திகழ்ந்தார். அவரது மறைவு பேரிழப்பாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், யாழ்.பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் மறையொட்டி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கையில் உள்ள பிரதானமான மதவழிபாட்டு தலங்களில் ஒன்றாகிய நல்லூர் கந்தசுவாமி கோவிலின் நிர்வாக அதிகாரியும் அறங்காவலருமான பெருமதிப்புக்குரிய குமாரதாஸமாப்பாண முதலியார்(09-10-2021)காலமாகிவிட்டார் என்ற செய்தி பெரும் துயரத்தை தந்தது.
1964ஆம் ஆண்டு ஆலயத்தினுடைய அறங்காவலராக பொறுப்பெடுத்த காலம் தொடக்கம் தற்போதுவரை ஆலயத்தினை நிர்வகித்து வருவதுடன் அசாதாரணமான காலங்களிலும் நெருக்கடியான காலங்களில் நிர்வாகத்தை குறைவின்றி நடாத்தி கடமை, கண்ணியம் கட்டுப்பாடு, ஆண்டவன் முன் அனைவரும்சமம், என்ற கொள்கைகளை தொய்வின்றி நிறைவேறும் உதாரணபுருஷராக திகழ்ந்தார்.
மிகப்பிரதானமான ஆலயத்தின் தலைவராகவும் உரிமையாளராகவும் இருந்தும் தமக்கென்று எந்தவித முக்கியத்துவமான சடங்கு சம்பிரதாயங்களோ தவிர்த்து ஆலயத்துக்குவரும் பக்தர்களுடன் பக்தானகவும் இறைவன் முன் அனைவரும் சமம் என்ற அந்த உன்னத நிலையினை மக்களுக்கு எடுத்துக்காட்டுவதாக இருந்ததும் அவரின் பரந்த மனதை எடுத்துக்காட்டியதும் ஆகும்.
அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் உறவினர்களுக்கும் பொது மக்களிற்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத்தெரிவித்துக்கொள்ளுகிறேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.