மேஷம்
காரியங்கள் துரிதமாக நடைபெறும் நாள். கல்யாண முயற்சி கைகூடும். நிதிநிலை உயர என்ன செய்யலாம் என்று யோசிப்பீர்கள். மனதில் தெம்பும், தைரியமும் அதிகரிக்கும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும்.
ரிஷபம்
தாராளமாகச் செலவிட்டு மகிழும் நாள். விரயம் உண்டு. மனஉறுதியுடன் செயல்படுவீர்கள். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். சுபச்செய்திகள் வந்து சேரும். இடமாற்றச் சிந்தனை மேலோங்கும்.
மிதுனம்
நினைத்தது நிறைவேறும் நாள். பக்குவமாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். பிள்ளைகளால் விரயம் உண்டு. தொழிலில் புதிய முதலீடுகள் செய்யும் எண்ணம் மேலோங்கும்.
கடகம்
வியக்கும் செய்திகள் வீடு வந்து சேரும் நாள். உற்றார் உறவினர் உறவில் ஏற்பட்ட விரிசல்கள் மறையும். கடந்த இரண்டு நாட்களாக நடைபெறாத காரியமொன்று இன்று தானாகவே நடைபெறும்.
சிம்மம்
செல்வாக்கு உயரும் நாள். செய்தொழிலில் மேன்மை கிடைக்கும். எதிர்பாராத விதத்தில் பயணங்களை மேற்கொள்ள நேரிடும். குடும்பத்தில் அனைவரின் தேவைகளையும் பூர்த்தி செய்துமகிழ்வீர்கள்.
கன்னி
விரயங்கள் கூடும் நாள். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கும் ஆர்வம் அதிகரிக்கும். பிரிந்து சென்ற உறவினர்களால் பிரச்சினைகள் உண்டு. இடம் வாங்கும் முயற்சியில் ஏமாற்றம் ஏற்படலாம்.
துலாம்
உடன்பிறப்புகளின் உதவி கிடைத்து மகிழும் நாள். வாழ்க்கைத் தரம் உயர வழிவகை செய்து கொள்வீர்கள். கவுரவம், அந்தஸ்து உயரும். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும்.
விருச்சிகம்
நன்மைகள் நடைபெறும் நாள். வாரிசுகளின் முன்னேற்றம் கண்டு ஆச்சரியப்படுவீர்கள். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்ப்பர். மங்கல நிகழ்ச்சி இல்லத்தில் நடைபெறுவதற்கான வாய்ப்பு வந்து சேரும்.
தனுசு
வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும் நாள். நீண்ட நாளைய எண்ணம் நிறைவேறும். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகள் கைகூடும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.
மகரம்
வழிபாட்டால் வளர்ச்சி காணவேண்டிய நாள். காரியங்கள் நிறைவேற அதிகப் பிரயாசை எடுக்க வேண்டியதாயிருக்கும். குடும்பத்தினர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.
கும்பம்
பாராட்டும், புகழும் கூடும் நாள். வியாபார முன்னேற்றம் ஏற்படும். விரும்பிய காரியத்தை விரும்பியபடியே செய்து முடிப்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் தேடி வரும். திருமணத் தடை அகலும்.
மீனம்
உத்தியோக மாற்றம் பற்றிச் சிந்திக்கும் நாள். கட்டிடப் பணி பாதியில் நிற்கிறதே என்ற கவலை அதிகரிக்கும். பயணங்களால் பலவிதமான வழிகளில் செலவு ஏற்படும். பெற்றோர் உடல் நலனில் கவனம் தேவை.