கல்வியங்காடு பகுதியில் பல்பொருள் விற்பனையகம் மீது வன்முறை குழு ஒன்று தாக்கியதுடன் பெற்றோல் குண்டு வீசிவிட்டு தப்பிச் சென்றது.
இந்த சம்பவம் நேற்று இரவு 7.00 மணியளவில் கல்வியங்காடு ஆடியபாதம் வீதியில் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த வன்முறை குழு விற்பனையகத்தின் மீது பெற்றோல் குண்டு வீசித் தாக்கவிட்டு, கண்ணாடிகளை அடித்து நொருக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது.
இந்தச் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.