தற்போதைய எரிபொருள் நெருக்கடி காரணமாக கர்ப்பிணித் தாய்மார்களை வைத்தியசாலையில் அனுமதிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் கர்ப்பிணித் தாய்மார்களை வீட்டிலேயே பிரசவம் செய்ய தயாராக இருக்குமாறு அரச குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு அதன் தலைவி தேவிகா கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.
தற்போது நிலவும் சூழ்நிலையில் போக்குவரத்து சிரமங்கள் உள்ளதால் எந்த நேரத்திலும் பிரசவத்தை எதிர்கொள்ளும் தாய்க்கு வசதிகளை செய்து கொடுக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
பிரசவத்தில் தலையிடுவதற்கான அனுமதியையும் அதிகாரத்தையும் இலங்கை மருத்துவ சபை தமக்கு வழங்கியுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.