மேஷம்
பக்கத்தில் உள்ளவர்கள் பக்க பலமாக விளங்கும் நாள். சந்தோஷம் அதிகரிக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். தொழில் தொடர்பாக எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
ரிஷபம்
வழக்கமாகச் செய்யம் பணிகளில் மாற்றம் ஏற்படும் நாள். வருங்காலம் பற்றிய பயம் அகலும். பொதுவாழ்வில் ஏற்பட்ட வீண்பழிகள் விலகும். புதிய பொறுப்புகள் வந்து சேரலாம். சம்பளப் பாக்கிகள் வந்து சேரும்.
மிதுனம்
முயற்சிகளில் இருந்த குறுக்கீடுகள் அகலும் நாள். அனுபவஸ்தர்களின் ஆலோசனையால் தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். தடைப்பட்ட காரியம் தானாக நடைபெறும். பிள்ளைகளால் பெருமை சேரும்.
கடகம்
ஏமாற்றங்கள் அகலும் நாள். இல்லம் தேடி நல்ல தகவல் வரலாம். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர்.
சிம்மம்
தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் நாள். பழைய பாக்கிகள் வசூலாகி பரவசப்படுத்தும். இடமாற்றம், உத்தியோக மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர்.
கன்னி
முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். அரசியல்வாதிகளின் ஆதரவு உண்டு. பிள்ளைகள் உங்கள் சொல்லுக்கு மதிப்புக் கொடுப்பர். திருமணப் பேச்சுகள் திடீரென முடிவாகலாம். தெய்வ நம்பிக்கை கூடும்.
துலாம்
அன்பு நண்பர்களின் ஆதரவு கூடும் நாள். பொதுவாழ்வில் புகழ் கூடும். எந்தக் காரியத்தையும் எடுத்தோம், முடித்தோம் என்று செய்து முடிப்பீர்கள். புது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
விருச்சிகம்
மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும் நாள். எதிர்பார்த்த தொகை வந்து சேரும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில் வளர்ச்சிக்கு பிற இனத்தாரின் ஒத்துழைப்பு உண்டு.
தனுசு
எதிர்காலம் பற்றிய பயம் ஏற்படும் நாள். எதையும் திட்டமிட்டுச் செய்யஇயலாது. இடமாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். எடுத்த காரியத்தை முடிக்க அதிக அலைச்சல்களைச் சந்திக்க நேரிடும்.
மகரம்
மனக்குழப்பம் அகலும் நாள். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். திட்டமிட்ட காரியமொன்று நடைபெறாவிட்டாலும் திட்டமிடாத காரியம் நடைபெறும். தொழிலில் எதிர்பாராத லாபம் கிட்டும்.
கும்பம்
உற்சாகம் அதிகரிக்கும் நாள். சுபச்செய்திகள் திருமணப் பேச்சுகள் முடிவாகலாம். எதிர்மறைச் சொற்களை தவிர்ப்பது நல்லது. வீட்டைச் சீரமைப்பதில் ஆர்வம் கூடும். உடல் நலத்தில் கவனம் தேவை .
மீனம்
யோகமான நாள். குடும்ப வருமானத்தை உயர்த்த புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். புகழ்மிக்கவர்களின் தொடர்பால் புதிய திருப்பங்கள் ஏற்படும். பிறர் விமர்சனங்களைக் கண்டு கவலைப்பட வேண்டாம்.