சமையல் எரிவாயு சிலிண்டர்களில் சவர்க்கார நுரை மற்றும் பிற பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு லிட்ரோ எரிவாயு நிறுவனம் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
சவர்க்கார நுரை மற்றும் ஏனைய பொருட்களை பயன்படுத்தி எரிவாயு சிலிண்டரை தனிப்பட்ட முறையில் பரிசோதிப்பது ஆபத்தான நிலை எனவும், கடையில் இருந்து வீட்டிற்கு எரிவாயு சிலிண்டரை கொண்டு வரும்போது சீல் வைக்கப்பட்டு இருக்க வேண்டும் என நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பணிப்பாளரான ஜனக பத்திரத்ன தெரிவித்தார்.
ஊடக சந்திப்பின்றொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், எரிவாயு சிலிண்டரில் உள்ள சீல் அகற்றப்பட்டால், ஒரு ரெகுலேட்டர் அல்லது பாதுகாப்பு மூடி இணைக்கப்பட வேண்டும் என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.