ரியோ, ஆரி, சோம், பாலாஜி, ரம்யா என 5 போட்டியாளராக மக்களின் வாக்குகள் மூலம் பைனலிஸ்ட்டாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 இறுதிப் போட்டி நாள் நிகழ்ச்சி நேற்று இரவு ஒளிபரப்பப்பட்டது. வெற்றி பெறப்போவது யார் என்று மக்கள் ஆவலுடன் காத்திருந்து பார்த்தனர். ஆரி, பாலாஜி இருவருக்கும் கடும் போட்டி நிலவிய நிலையில் நீண்ட சஸ்பென்ஸுக்குப் பிறகு வெற்றி பெற்றது ஆரி என்று அறிவித்தார் கமல்ஹாசன். வெற்றி பெற்ற ஆரி, மிகுந்த நெகிழ்ச்சியுடன் மேடையில் உரையாற்றினார். அவரது பேச்சின் ஒரு பகுதி
ஆனால் இதில் 16 கோடி அதிக வாக்குகள் பெற்று பிக் பாஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னராகி இருக்கிறார் நடிகர் ஆரி.
மேலும் தனது தாய், தந்தைக்கும் கோப்பையை கைப்பற்றிய அந்த தருணத்தில் தனது நெகிழ்ச்சியான பேச்சை வெளிப்படுத்தினர்.
“என் வாழ்க்கைல கடைசியா அஞ்சாவது படிக்கும்போதுதான் ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்குனேன். அதுக்கு அப்புறம் வாழ்க்கையில முதலிடம் என்பது எங்கேயுமே கிடைக்கவேயில்லை. தோல்விகள்தான் அதிகம். இத்தனை வருஷங்களுக்கு அப்புறம் இந்த மேடையில் முதலிடம் என்ற மிகப்பெரிய பெருமை எனக்கு கிடைச்சிருக்கு. நம்ம வாழ்க்கையில எங்கயாவது ஜெயிச்சா அதை நாம பகிர்ந்துக்க விரும்புறது அப்பா அம்மாகிட்டதான். அப்பா நான் ஜெயிச்சுட்டேன், அம்மா நான் ஜெயிச்சுட்டேன்னு சொல்ல விரும்புவோம். என் அப்பா அம்மா இப்போ இல்லை. ஆனா, அவுங்ககிட்ட ஆசீர்வாதம் வாங்க நினைக்கிறன்.”