குஜராத் மாநிலம், கட்ச் மாவட்டத்தில் உள்ள மதாபர் கிராமம், உலகின் பணக்கார கிராமமாக உருவெடுத்துள்ளது. 7 ஆயிரத்து 600 குடியிருப்புகளைக் கொண்ட இந்த கிராமத்தில் உள்ள, 17 க்கும் மேற்பட்ட வங்கிகளில் மக்கள் 5 ஆயிரம் கோடி ரூபாவை வைப்புச் செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
இங்கு தனி நபர் சேமிப்பு 15 இலட்சம் ரூபாவாக உள்ளது என்றும் இதனால் குஜராத்தில் உள்ள இந்த மாதபர் கிராமம் உலகளவில் பணக்கார கிராமமாக உள்ளது எனவும் கூறப்படுகிறது.
இங்கு 17 பொது வங்கிகள் மட்டுமன்றி, பள்ளிகள், கல்லூரிகள், சுகாதார மையங்கள், கோவில்கள், அணைகள், ஏரிகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.