இந்திய கடற்படைக்கு சொந்தமான 6 கப்பல்கள் நாட்டை வந்தடைந்துள்ளன.
பயிற்சி நடவடிக்கைக்காக இந்த கப்பல்கள் நாட்டை வந்தடைந்துள்ளதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வா தெரிவித்தார்.
ஐ.என்.எஸ்.மாகர் (INS Magar), ஐ.என்.எஸ் ஷர்துல் (INS Shardul), ஐ.என்.எஸ்.சுஜாதா (INS Sujata), ஐ.என்.எஸ்.தரங்கிணி (INS Tarangini), ஐ.என்.எஸ்.சுதர்ஷின் (INS Sudarshini), சி.ஜி.எஸ்.விக்ரம் (CGS Vikram) ஆகிய கப்பல்களே வருகை தந்துள்ளன.
இந்திய கடற்படையின் பயிற்சி அதிகாரிகளுடனான ‘கெடட்’ படையினர் இந்த கப்பல்களில் வருகை தந்துள்ளனர்
ஐ.என்.எஸ்.மகர் & ஷர்துல் ஆகிய கப்பல்கள் கொழும்பிற்கும் ஐ.என்.எஸ்.சுஜாதா,தரங்கனி,சுதர்ஷினி மற்றும் சி.ஜி.எஸ். விக்ரம் ஆகியவை திருகோணமலைக்கும் விஜயம் மேற்கொண்டுள்ளன.
— India in Sri Lanka (@IndiainSL) October 24, 2021