மேஷம்
போட்டிகளைச் சமாளித்து வெற்றி காணும் நாள். பொதுவாழ்வில் ஏற்பட்ட வீண் பழிகள் அகலும். தொழில் ரீதியாகப் பயணம் செய்யும் வாய்ப்பு கிட்டும். பொருளாதார நிலை உயரும். புதிய தகவல் மகிழ்ச்சி தரும்.
ரிஷபம்
எதிரிகள் விலகும் நாள். லாபம் எதிர்பார்த்தபடி வந்து சேரும். தொழில் தொடர்பாக புதியவர்களின் அறிமுகம் கிடைக்கலாம். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு.
மிதுனம்
யோகமான நாள். குடும்ப வருமானத்தை உயர்த்தப் புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வெளியுலகத் தொடர்புகள் விரும்பும் விதத்தில் அமையும். புகழ் மிக்கவர்களின் சந்திப்புக் கிடைக்கும்.
கடகம்
வியாபார விரோதங்கள் விலகும் நாள். விடியற்காலையிலேயே வரவு வந்து சேரும். இல்லம் தேடி வரும் நண்பர்கள் இனிய தகவலைத் தருவர். விரும்பிய பொருட்களை வாங்கிச் சேர்க்க முற்படுவீர்கள்.
சிம்மம்
தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். உறவினர்களின் சந்திப்பால் சந்தோஷம் அதிகரிக்கும். பழைய பாக்கிகள் திடீரென வசூலாகிப் பரவசப்படுத்தும். சகோதரர்களால் ஏற்பட்ட பிரச்சினை நல்ல முடிவிற்கு வரும்.
கன்னி
முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். பணவரவு திருப்தி தரும். பஞ்சாயத்துகள் சாதமாக முடியும். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்புக் கொடுப்பர். கனவு பலிதம் உண்டு. சுபகாரியப் பேச்சுகள் கைகூடும்.
துலாம்
சந்தோஷ வாய்ப்புகளைச் சந்தித்து மகிழும் நாள். வருங்கால நலன் கருதித் தீட்டிய திட்டம் வெற்றி பெறும். மாற்றினத்தவர்களால் மகிழ்ச்சிக்குரிய சம்பவமொன்று நடைபெறும். சொத்து விற்பனையால் லாபம் உண்டு.
விருச்சிகம்
முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கும் நாள். பொது வாழ்வில் பாராட்டும், புகழும் கூடும். எந்தக் காரியத்தையும் எடுத்தோம், முடித்தோம் என்று செய்து முடிப்பீர்கள். வரவு திருப்தி தரும்.
தனுசு
மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். மங்கல நிகழ்ச்சி மனையில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படும். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும். சுபச்செய்தியொன்று சுற்றத்தார் மூலம் வந்து சேரலாம்.
மகரம்
பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். பாசம் மிக்கவர்கள் பக்கபலமாக இருப்பர். திட்டமிட்ட காரியமொன்று நடைபெறாவிட்டாலும் மருத்துவச் செலவுகள் தவிர்க்க முடியாததாக அமையும்.
கும்பம்
நினைத்தது நிறைவேறி நிம்மதி காணும் நாள். இடமாற்றம், தொழில் மாற்றம் செய்வது பற்றிய சிந்தனை மேலோங்கும். பணம் எவ்வளவு வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் உண்டு.
மீனம்
தெய்வ வழிபாடுகளால் திருப்தி காண வேண்டிய நாள். வாங்கல் கொடுக்கல்களில் கூடுதல் கவனம் தேவை. தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளில் அலைச்சல்களைச் சந்திக்க நேரிடும்.