மேஷம்
விரயங்கள் ஏற்படாதிருக்க விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். பிள்ளைகளால் தொல்லை உண்டு. இடமாற்றச் சிந்தனை மேலோங்கும். அதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது.
ரிஷபம்
நல்லவர்களின் தொடர்பால் நலம் காணும் நாள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். அன்னிய தேசத்திலிருந்து எதிர்பார்த்த தகவல் வரலாம். வெளிவட்டாரப்பழக்க வழக்கம் விரிவடையும்.
மிதுனம்
அன்றாடப் பணிகள் நன்றாக நடைபெறும் நாள். வருமானம் போதுமானதாக இருக்கும். தேவையில்லாத விஷயங்களில் தலையிட்டதால் ஏற்பட்ட தொல்லை அகலும். மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும்.
கடகம்
பிறரை நம்பிச் செய்த காரியம் நல்ல விதமாக நடைபெறும் நாள். எவ்வளவுதான்பொறுப்பாகச் செயல் பட்டாலும் எதாவது ஒரு மனக்குறை உருவாகும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.
சிம்மம்
செயல்பாடுகளில் வெற்றி கிட்டும் நாள். மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறுவதற்கான அறிகுறிகள்
தோன்றும். நூதனப் பொருட்களின் சேர்க்கை உண்டு. செல்போன் வழித்தகவல் சிந்திக்க வை க்கும்.
கன்னி
தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் நாள். தனவரவு திருப்தி தரும். வாங்கல்-கொடுக்கல்களை ஒழுங்கு செய்து கொள்வீர்கள். உறவினர் பகை மாறிஉள்ளத்தில் மகிழ்ச்சி கூடும்.
துலாம்
யோகமான நாள். எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். நிதிநிலை உயர எடுத்த முயற்சி வெற்றி பெறும். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுகள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும்.
விருச்சிகம்
நாலாபுரத்திலிருந்தும் நல்ல தகவல் கிடை க்கும் நாள். நண்பர்களிடம் நயமாகப் பேசிக்காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். தொழில் முன்னேற்றத்திற்கு எடுத்த முயற்சி வெ ற்றி பெறும்.
தனுசு
துன்பங்கள் தூளாகும் நாள். மூத்தவர்களால் ஏற்பட்ட பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். நடக்குமா, நடக்காதோ என்று நினைத்த காரியம் நல்லவிதமாக நடைபெறும். தொழில் சீராக இருக்கும்.
மகரம்
வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். வருமானம் நிரந்தரமாக வர என்ன செய்யலாம் என்று யோசிப்பீர்கள். தொலை தூரத்திலிருந்து எதிர்பார்த்த நல்ல தகவலொன்று வந்து சேரலாம்.
கும்பம்
இனிமையான நாள். யாரைச்சந்திக்க வேண்டுமென்று நினைத்தீர்களோ அவர்களே உங்களைத் தேடிவரும் வாய்ப்பு உண்டு. தொழிலில் முன்னேற்றம் அதிகரிக்கப்புதிய யுக்திகளைக் கையாள்வீர்கள்.
மீனம்
இடமாற்றம் பற்றிச் சிந்திக்கும் நாள். மனதில் நினைத்த காரியமொன்றை மறுநிமிடமே செய்து முடிப்பீர்கள். பூர்வீக சொத்து சம்பந்தமான வழக்குகள் சாதகமாகமுடியும். வரவும் செலவும் சமமாகும்.