இந்திய வெளிவிவகார செயலாளர் உள்ளிட்ட விசேட தூதுக்குழுவினர் இன்று இலங்கைக்கு அவசர விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளனர்
குறித்த விசேட தூது குழுவில் இந்திய அரசிசாங்கத்தின் பிரதம பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நாட்டிற்கு வருகை தரும் விசேட குழுவினர் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்துரையாடவுள்ளதாகம் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையை மதிப்பீடு செய்வது குறித்த விஜயத்தின் பிரதான நோக்கம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் சுமார் மூன்று மணித்தியாலங்கள் மாத்திரம் தங்கியிருக்கும் குறித்த தூதுக்குழுவினர் விசேட விமானம் மூலம் இலங்கைக்கு வருகைதரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.