மேஷம்
திட்டமிட்ட காரியமொன்றில் திடீர் மாற்றம் செய்யும் நாள். செலவுகள் கூடும். தொழில் ரீதியாக எடுத்த முயற்சி வெற்றி பெறும். உறவினர்கள் உங்களிடம் சில பொறுப்புகளை ஒப்படைப்பர்.
ரிஷபம்
மனோ தைரியம் கூடும் நாள். மதிப்பும், மரியாதையும் உயரும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சி கைகூடும். குடும்பத்தினர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.
மிதுனம்
ஆதாயம் அதிகரிக்கும் நாள். சொத்துப்பிரச்சினை சுமூகமாக முடியும். அரசுவழிக் காரியங்களில் அனுகூலம் உண்டு. சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து படைத்தவர்களின் நட்பு கிட்டும்.
கடகம்
முன்யோசனையுடன் செயல் பட வேண்டிய நாள். வாக்குவாதங்கள் செய்வதைத் தவிர்க்கவும். உறவினர் பகை உருவாகலாம். உத்யோகத்தில் பிரச்சினை ஏற்படலாம். விரயங்கள் கூடும்.
சிம்மம்
சம்பள உயர்வு பற்றிய சந்தோஷ தகவல் வந்து சேரும் நாள். மதிநுட்பத்தால் மகத்தான காரியமொன்றைச் செய்து முடிப்பீர்கள். வெளிவட்டாரத் தொடர்பு விரும்பும் விதத்தில் அமையும். பயணம் பலன் தரும்.
கன்னி
துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். பூர்வீக சொத்துக்கள் சம்மந்தப்பட்ட பஞ்சாயத்துக்களில் நல்ல முடிவு கிடைக்கும். வரவு திருப்தி தரும். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு.
துலாம்
புதிய பணியில் சேருவதில் ஆர்வம் காட்டும் நாள். புகழ்மிக்கவர்களின் பழக்கம் ஏற்படும். நீண்ட நாளைய எண்ணம் நிறைவேறும். அத்தியாவசியப் பொருட்களை வாங்கிச் சேர்க்க முன்வருவீர்கள்.
விருச்சிகம்
வீடு வாங்கும் திட்டம் வெகு எளிதில் நிறைவேறும் நாள். பாக்கிகள் வசூலாகிப் பணவரவைப் பெருக்கும். தொழிலில் புதிய பணியாளர்களைச் சேர்க்கும் எண்ணம் மேலோங்கும்.
தனுசு
பொது வாழ்வில் புகழ் கூடும் நாள் . புதிய பாதை புலப்படும். அரைகுறையாக நின்ற வீட்டுப் பராமரிப்புப் பணியைத் தொடருவீர்கள். வரவும் செலவும் சமமாகும்.
மகரம்
அலைபேசி மூலம் ஆதாயம்தரும் தகவல் வந்து சேரும் நாள். நினைத்தது நிறைவேறி நிம்மதி காண்பீர்கள். உத்யோகத்தில் உடனிருப்பவர்களின் உதவி கிடைக்கும்.
கும்பம்
இல்லத்திலும், உள்ளத்திலும் அமைதி கூடும் நாள். பகை பாராமல் அனைவருக்கும் உதவி செய்வீர்கள். தடைப்பட்ட வருமானம் தானாகவே வந்துச சேரலாம். உடன்பிறப்புகள் வழியில் மனக்கசப்புகள் மாறும்.
மீனம்
கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழும் நாள். இல்லத்தினர்களின் ஒத்துழைப்போடு ஏற்ற பணிகளைச் செய்து முடிப்பீர்கள். உயரதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள்.