மேஷம்
நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். கொடுத்த வாக்கைக் கடைசி நேரத்தில் காப்பாற்றுவீர்கள். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். வருமானம் திருப்தி தரும்.
ரிஷபம்
உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு கிடைக்கும் நாள். உயர் பதவியில் உள்ளவர்கள் உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வர். சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும். அலைபேசி வழித்தகவல் அனுகூலம் தரும்.
மிதுனம்
நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். மனதில் நினைத்ததை மறுகணமே செய்து முடிப்பீர்கள். விட்டுப்போன வரன்கள் மீண்டும் வந்து சேரலாம். ஆதாயம் தரும் வேலை யொன்றில் அக்கறை காட்டுவீர்கள்.
கடகம்
யோகமான நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். கூட்டு முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பெண் வழிப் பிரச்சினைகள் தீரும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணைவர்.
சிம்மம்
எதிரிகள் உதிரியாகும் நாள். எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். தேக ஆரோக்கியத்தில் தெளிவு கிடைக்கும். மற்றவர்களின் விமர்சனங்களை மறந்து செயல்படுவது நல்லது.
கன்னி
நினைத்ததை முடித்து நிம்மதி காணும் நாள். குழந்தைகளின் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். இடம், பூமியால் எதிர் பார்த்த லாபம் கிட்டும். சேமிப்பை உயர்த்தும் எண்ணம் மேலோங்கும்.
துலாம்
காரிய வெற்றிக்கு கந்தப் பெருமானை வழிபட வேண்டிய நாள். ஒப்பந்தங்கள் கை நழுவிச் செல்லும். பிரியமான சிலரிடம் யோசித்துப் பேசும் சூழ்நிலை உருவாகலாம். மறதியால் அவதிகளுக்கு ஆட்பட நேரிடும்.
விருச்சிகம்
பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். பொருளாதார நிலை உயரும். தொழில் முன்னேற்றம் கருதிப் புதிய பணியாளர்களைச் சேர்ப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். நண்பர்கள் நல்ல தகவல்களைத் தருவர்.
தனுசு
வழிபாட்டால் வளர்ச்சி காண வேண்டிய நாள். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை. திட்டமிட்ட காரியம் ஒன்று நடைபெறா விட்டாலும் திட்டமிடாத காரிய மொன்று நடைபெற்று மகிழ்ச்சி தரும்.
மகரம்
யோகமான நாள். உள்ளம் மகிழும் சம்பவம் இல்லத்தில் நடை பெறும். தனவரவு தாராளமாக வந்து சேரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். அரசு வழிச்சலுகை கிட்டும்.
கும்பம்
விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். வீடு மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். பொதுநலத்தில் ஆர்வம் காட்டுவீர்கள். எதிர்மறை எண்ணத்தை தவிர்ப்பது நல்லது. வாகனப் பழுதுகளால் வாட்டம் உண்டு.
மீனம்
லாபகரமான நாள். விரும்பிய காரியத்தை விரும்பியபடியே செய்து முடிப்பீர்கள். அன்னிய தேசத்தொடர்பு அனுகூலம் தரும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும்.