சீன உளவுத்துறை அதிகாரி சூ யான்ஜுன் என்பவர் பெல்ஜியத்தில் 2018-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். பின்னர் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டார்.
இவர் அமெரிக்க ராணுவ நிறுவனங்களின் ரகசியங்களைத் திருட சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கை அமெரிக்க நீதிமன்றம் விசாரித்து, அவர் குற்றவாளி என்று தீர்ப்பு அளித்தது. அவருக்கு 60 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என தகவல்கள் கூறுகின்றன.
முன்னதாக பல அமெரிக்க விமானப் போக்குவரத்து மற்றும் விண்வெளி நிறுவனங்களின் வர்த்தக ரகசியங்களைத் திருட சதி செய்ததற்காக, சீன அரச பாதுகாப்பு அமைச்சகத்தின் உளவாளி, மத்திய நடுவர் மன்றத்தால் தண்டிக்கப்பட்டார் என்று நீதித்துறை நேற்று முன் தினம் தெரிவித்திருந்தது.