மாகாணசபைத் தேர்தல்களை, 2022ஆம் ஆண்டு முதல் காலாண்டில் நடத்த அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் முகநூல் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற தேர்தல் முறை மாற்றம் தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழுவின் கூட்டத்தில், பங்கேற்ற அமைச்சர் பஷில் ராஜபக்ஷ இதனைத் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கலப்பு முறைப்படி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதும் சிறுபான்மை கட்சிகள் விகிதாசார முறைப்படியே தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தனர்.
இந்தநிலையில் விகிதாசார முறைப்படி மாகாண சபைத் தேர்தலை நடத்தவும் 2022ஆம் ஆண்டு முதல் காலாண்டில் தேர்தலை நடத்தவும் சிறிலங்கா அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.