இறக்குமதி செய்யப்பட்ட கீரி சம்பா தொகையை அடுத்தவாரம் முதல் கிலோ ஒன்று 125 ரூபா என்ற விலையில், சந்தைப்படுத்தவிருப்பதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
சதொச ஊடாக இந்த அரிசி விநியோகம் இடம்பெறும் என்று அவர் கூறியுள்ளார். அதேநேரம் மீண்டும் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை அறிவிக்கப்படுமா? என்பது தொடர்பாக இப்போதைக்குக் கூற முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் சீனி இறக்குமதியாளர்கள் சங்கத்துக்கும், நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ணவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று(22) இடம்பெற்றது.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சீனித் தட்டுப்பாடு தொடர்பாக இதன்போது அவதானம் செலுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.